srada/saburi
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வரஹா குரு சாட்சாத் பரபிரம்மா தஸ்மைஸ்ரீ குருவே நமஹ
முதல் பக்கம்
எவ்வாறு வருவது
சன்னதிகள்
பூஜை மற்றும் நேர விபரங்கள்
கொண்டாடப்படும் விழாக்கள்
வீடியோ தொகுப்புகள்
புகைபட தொகுப்புகள்
பக்தர்களின் அனுபவங்கள்
mahamaham news update
வியாழன் தோறும்
4.30 am - கோவில் திறப்பு
6.15 am - பாபா அபிஷேகம்
9.30 am - குருஸ்தான் அபிஷேகம் / பூஜை ஆரம்பம்
12.00 am - பக்தர்கள் பாட - மதிய ஆரத்தி
12.45 noon - காலை வேளை கோவில் சார்த்தல்
3.300 pm - மாலை கோவில் திறப்பு
6.00 pm - ஆரத்தி
6.45 pm - பக்தர்களின் பஜனை
7.45 pm - ஆரத்தி
8.00 pm - சாவடி ஊர்வலம்
9.45 pm - கோவில் சார்தல்
முதல் பக்கம்
கலியுகத்தில் நம்மை வழி நடத்த வந்த அவதார புருஷர்களில் ஒருவரே நமது சாய் நாதர். 1838 ஆண்டு பிறந்ததாக கூறப்படும், நம் நாதர் 1872 ஆண்டு ஒரு கால்யாண கோஷ்டியுடன் ஷிர்டி வந்து அடைந்தார்.

நம்மில் பலருக்கு 'சாயி' என்ற திவ்ய நாமமே உயிர் மூச்சாக இருக்கும். ஆனால் 'சாய்' (சாயி) என்பவர் யார் அவர் குணதிசியங்களை என்ன  என்பதை, நமது சாயின் சம காலத்து மகான் ' ஸ்ரீ ராகிருஷ்ண பரம ஹம்ஸர்'   தனது அமுத மொழிகளில் (10-10-1983) கீழ் கண்டவாறு கூறுகிறார்.

சாதகர்களைப் பிரவர்த்தகர், சாதகர், சித்தர், சித்தரில் சித்தர் என்று கர்த்தாபஜாக்கள் பிரிக்கின்றனர். பிரவர்த்தகர்கள் நெற்றியில் திலகமும் கழுத்தில் மாலையும் அணிவார்கள்; புற ஆசாரங்களைக் கடைப்பிடிப்பார்கள். சாதகர்கள் புற விஷயங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள்; உதாரணமாக பௌல்கள். இறைவன் இருக்கிறார் என்பதில் சரியான நம்பிக்கை உடையவர்கள் சித்தர்கள். ஸ்ரீசைதன்யர் போன்றோர் சித்தரில் சித்தர். இவர்கள் கடவுளைக் கண்டதுமட்டுமல்லாமல் அவருடன் எப்பொழுதும் பேசுகின்றனர்; நெருங்கிப் பழகுகின்றனர். சித்தரில் சித்தரை அவர்கள் ஸாயி என்கின்றனர். ஸாயிக்குமேல் உயர்ந்த நிலை இல்லை. 

1872 ஆம் ஆண்டு, சாந்த்பாய் படேலின் கல்யாண கோஷ்டியுடன் வந்த பாபாவை ,  கண்டோபாவின் மிக சிறந்த பக்தரான மஹால்ஸபதியின் நாவிலே குடிகொண்ட, சரஸ்வதி தேவி "அவோ ஸாயி!'' (ஸாதுவே வருக!) என்று சொல்லி பாபாவை  மஹால்ஸபதி மூலம் வரவேற்றாள் என்று கூறினால் மிகையாகாது.

1918 ல் தனது பூத உடலை விட்டு பிரிந்த பாபா, எங்கும் நீக்கமற நிறைந்து தனது பக்தர்களை எப்பொழுதும் காத்து இரட்சித்து கொண்டு இருக்கிறார் என்பது நிதர்சனமான உண்மை.நாடெங்கிலும் உள்ள ஷிர்டி பாபா கோவில்கள் இதற்கு சாட்சி.

பாபாவின் பரிபூரண ஆருள் நிலை கொண்டுள்ள கோவில்களில் ஒன்றே நமது கௌரிவாக்கம் பாபா கோவில்.

 

 

 

கௌரிவாக்கம் ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா கோவில்
Gowrivakkam Baba Kovilதனது பரம பக்தரான சித்த புருஷர் குலசேகர பெருமாள் மூலம், சாய் நாதர் தனக்கு ஏற்படுத்திக்கொண்ட கோவிலே கௌரிவாக்கம் சாய் நாதர் கோவில். தன்னை தேடி வரும் பக்தர்களின் கஷ்டங்களை பொறுமையாய் கேட்டு நல்வழி காட்டுவதால் திரு குலசேகர பெருமாள் ' அப்பா' என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீ ராம கிருஷ்ணருக்கு - அன்னை சாரதா தேவி போல், அரவிந்தருக்கு ஒரு அன்னை போல், நமது அப்பாவிற்கு பாபாவை அடையாளம் காட்டியவர், அம்மா என்று அன்போடு அழைக்கப்படும் திருமதி கஜலெக்ஷ்மி குலசேகரபெருமாள். தனது ஆன்மீக குரு யார் என்று அப்பா கூறும் போது, இச்செய்தியை .................

மேலும் படிக்க >>
Developed and Maintained by 247b2c.com --- Shopping Search Engine